ஆனந்தி என்ற அட்சயபாத்திரம்..!


நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஆனந்தி என்ற பெயரின் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது. இவரின் துணிச்சல் மிக்க பேச்சுக்கள், முடங்கிக் கிடந்த தமிழர்கள் மத்தியில் ஒரு துணிவைக் கொடுத்தது. இவரின் துணிச்சலின்பால் அதிகமான தமிழர்கள் ஈர்க்கப்பட்டார்கள். அதிகளவிளான ஓட்டுக்களும் இவரின் துணிச்சல் மிக்க பேச்சுக்களுக்காகவே விழுந்தன… இம்முறை கூட்டமைப்பின் அமோக வெற்றிக்கு ஆனந்தியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
இதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது! பல நெருக்குதல்கள், பல மிரட்டல்கள், கொலை அச்சுறுத்தல்கள் என பல தொல்லைகள் கொடுத்தும்… தனிப் பெண்ணாக நின்று கொலைக்கார இலங்கை அரசங்கத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடினார். இவருக்கு அதிகரித்து வரும் மக்களின் செல்வாக்கைப் பார்த்துத்தான், தமக்கு தோல்வி ஏற்படும் என்ற பயத்தில் இலங்கை அரசங்கமும், அதனுடன் சேர்ந்து இயங்கும் இராணுவப் புலனாய்வினரும் மற்றும் ஒட்டுக் குழுக்களும் இவருக்கு எதிராக பல திருவிளையாடல்களை ஆடிப்பார்த்தனர். இறுதியில் எல்லாம் தோல்வியில் முடியவே…

மானங்கெட்ட அரசும், நக்கிப் பிழைக்கும் ஒட்டுக்குழுக்களும் இதுவரையில் இலங்கையில் எவருமே செய்யத் துணியாத மிகவும் கோழைத்தனமான, மிகவும் கேவலமான ஒரு செயலைச் செய்தார்கள். அந்தச் செயலானது யாழ்ப்பணத்தில் மிகவும் பிரபலமான பத்திரிகையான “உதயன்” பத்திரிகை போன்று ஒரு போலியான பத்திரிக்கையை உருவாக்கி விசேட பதிப்பாக அதில் “ஆனந்தி அரசுடன் இணைந்து விட்டார்” என்ற தலைப்புச் செய்தியுடன் ஒரு பொய்யான செய்தியை பதிவு செய்து தேர்தல் நடக்கப் போகின்ற அதிகாலையில் யாழ் மக்களிடையே விநியோகித்தார்கள்.
எப்படியாவது ஆனந்தியை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்த இனவாத அரசின் முகத்திரையைக் கிழித்து ஆனந்தியையும் அவரோடு சேர்ந்த கூட்டமைப்பையும் அமோக வெற்றி பெறச்செய்து “நீங்கள் வேறு, நாங்கள் வேறு” என்றும் “எமக்கான உரிமையை நாமே தேர்ந்தெடுப்போம்” என்றும் தமிழ் மக்கள் அனைவரும் உணர்த்தியுள்ளனர்.

இவ்வாறக நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஆனந்திதான் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்ததுடன். தமிழர்களுக்கெல்லாம் மீண்டும் ஒரு துணிவைக் கொடுத்துள்ளார். ஆகவே ஆனந்தியின் துணிச்சலைப் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல்…. இவரை ஈழத்தின் முதல் “இரும்புப் பெண்மணி” என்று அழைப்பதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.

            (22.09.2013)
இந்தப் பதிவின் இணைய வடிவம்:

முகநூல் போலிகளும்...
அம்மணமான உடல்களும்..!!




எந்தவொரு கொலைக்காரனும்...
எந்தவொரு கொள்ளைக்காரனும்...
எந்தவொரு காமூகனும்...
எந்தவொரு சமூக விரோதியும்...
எந்தவொரு உளவாளியும்....

தன்னுடைய போலி முகநூலில் தன்னைப் பற்றி அயோக்கியன் என்று ஒருபோதும் சொல்லிக் கொள்வதில்லை!!!

மாறாக... 

தான் ஒரு சமூக சிந்தனைவாதி என்றும்...

தான் ஒரு விடுதலைப் போராட்டப் போராளி என்றும்...

தான் ஒரு தமிழ் உணர்வாளன் என்றும்...

பெண்களின் உண்மையான பாதுகாவலன் என்றும்... 

இன்னும் பலவகையான போலி அடையாளங்களோடும் இந்த முகவரியற்ற முகநூல்களில் தான் ஒரு யோக்கியன் என்றவாறு...

பல ஆசை வார்த்தைகளை விதைத்து... 

பலரின் எண்ணங்களைச் சிதைத்து...

பலரின் வாழ்வினைச் சீரழித்து...

துக்கங்கள் பல கொடுத்து...

தூக்கமில்லா இரவுகளுக்குள் தள்ளிவிடுகிறார்கள்.!!!

இந்தப் போலி நாயகர்களை தங்கள் கனவு நாயகனாக நம்பித் தொலைத்து...

தம் அந்தரங்க விடயங்களை பகிர்ந்து அந்தரத்தில் தொங்கவிட்டு...

போலிப் புகைப்படங்களை நம்பி காதல்... காம... மயக்கங்களால் மெய்மறந்து...

அச்சம், மடம், நாணம் அனைத்தையும் ஒரேயடியாக இழந்து...

அவர்களின் முகநூல் தனிச்செய்திகளில் (inbox) ஆடைகளற்று அம்மணமாக அலைகிறது நிஜப் புகைப்படங்கள்..!

முன்பெல்லாம்...
உண்மைக்காதலில் இதயத்தைத்தான் கொடுப்பார்கள்...

அந்தக் காதல் தோல்வியில் முடிந்தாலூம் சோகத்தைத்தான் காட்டிக் கொள்வார்கள்..!

இந்த முகநூல் போலிக் காதலில் ஆடைகளற்ற உடலையல்லவா விதவிதமாக படம் பிடித்து அனுப்புகிறார்கள்..!

பின்பு உண்மை தெரிந்தவுடன் காதல் பொய்த்து விடும்.!!

பொய்யான காதல் உடலை பலருக்கு விற்பதுடன், உயிரையும் தூக்குக் கயிறு கொண்டும்... நஞ்சு மருந்து கொண்டும் அரவணைத்துக் கொள்கிறது!

இந்த கொடூரமான வலிகள் நிறைந்த உண்மைகள் பலருக்கு தெரியாமலேயே மறைக்கப்படுகிறது!!

பாதிக்கப்பட்ட சிலர் இறந்து விடுவதுடன் மீதமுள்ளவர்கள் முகநூலுக்கு முற்றுப்புள்ளி வைத்து மூடி விடுகிறார்கள்.

அதனால், விழிப்புணர்வு என்பது பலருக்கு இல்லாமலே போய் விட்டது!

அதனால்தான் போலிகளின் வேட்டைகளும் தொடர்கின்றது!

முகநூலில் ஐயாயிரம் நண்பர்கள் வைத்திருப்பது பெருமையல்ல...

ஐம்பது உறவுகள் என்றாலும் அவர்களை ஆராய்ந்து அளவோடு வைத்துக் கொள்வதுதான் சிறப்பு!

நன்கறிந்து கொண்ட அளவான நண்பர்களை வைத்துக் கொண்டவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

அறிந்திராத அளவற்ற நண்பர்களை வைத்துக் கொண்டு போலி வார்த்தைகளை நம்பிக் கொண்டு அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்பவர்கள்தான் அவதியுற்று அவஸ்தையோடு வாழ்கிறார்கள்!

முகநூல் என்பது முகவரியற்ற முகம் தெரியாத போலிகளின் கலைக்கூடம்.!

ஆகையால், நன்கு அறிமுகமான முகம் முகவரி தெரிந்த உறவுகளை மட்டுமே உங்கள் நட்புக்குள் இணைத்து...

பாதுகாப்பாகவும்... மகிழ்வோடும் வாழ்ந்திடுங்கள்... உங்கள் பெற்றவர்களையும் மகிழ்வித்துக் கொள்ளுங்கள்.. 

-  வல்வை அகலினியன் 

             (08.11.2014)

"காகிதப் பூக்கள்
கண்களைக் கவர்வதால்...
நிஜப் பூக்கள் வாழ்வினில்
நிம்மதியை இழந்து விடுகின்றன"
உணர்வற்ற ஜென்மங்களுக்கு.!!
(உணர்வற்ற ஜென்மங்களுக்கு... மனக்குழப்பத்துடன் எழுதுகின்றேன்)



என் தங்கை
இசைப்பிரியா அவளை
துன்புறுத்தி சீரழித்து
காமப் பேய்கள்
இழுத்துச் செல்லும்
காட்சிகளிலும்…

இதழ்கள் புடுங்கப்பட்ட
பூவாகத் துடித்து
“அய்யோ, 
துவாரகா நானில்லை” என
இறுதி வார்த்தைகளை 
விட்டுச் சென்ற 
காட்சிகளிலும்…

கைகள் கட்டப்பட்டு
கசங்கிய பூவாக
இதழ்கள் உதிர்ந்து
பெண்மை கலங்கி
உயிரற்ற உடலாக
உருக்குலைந்த கிடந்த
காட்சிகளிலும்…
இறந்தே போய் விட்டது
என் மனது!

அவளை…
ஒரு சாதாரண
மனிதப் பிறவியாக 
பார்க்கும் போது
பதறி வலிக்கிறது
என் மனது!

அவளை…
ஒரு சரித்திரப்
பெண் புலியாகப்
பார்க்கும் போது
வெடித்துக் கொதிக்கிறது
என் இதயம்!

கையாலாகாத…
அண்ணனாக இருந்து கொண்டு
உன் உணர்வுகளை நினைத்து
என் உணர்வுகளைக்
கொட்டலாம் என்றால்…

என் உணர்வுகள் மூர்ச்சையாகி
என் வார்த்தைகள் ஊமையாகி
என் பேனா அழுகின்றது!
என் தாளோ நனைகின்றது!

எதையெதையோ எழுதிய எனக்கு
உன்னை மட்டும் 
எழுதமுடியாமல் மூடிப் போனது
என் கணக்கு!




உன் இறுதி வலிகளை...
உன் இறுதிக் கதறல்களை...
உன் இறுதி எண்ணங்களை...
உன் இறுதி நினைவுகளை...
உன் இறுதி உணர்வுகளை...
உன் இறுதி ஏக்கங்களை...
உன் இறுதி தவிப்புக்களை...

எழுத…
தேடித் தேடிப் பார்க்கின்றேன்
வார்த்தைகள் கூட வராமல்
மறைந்து நின்று
அழுது புலம்புகின்றது!

இருந்தும் ஓரிரு வார்த்தைகளால்
என் உணர்வுள்ள வலிகளையாவது
வார்த்தைகளாக…
எழுதலாம் என்று
காகிதத்தை எடுத்தால்…
என் கண்ணீரால்
நனைகின்றது காகிதம்!

என்னால்…
எதுவும் முடியாமல்
இவளின் மருத்துவச்சி
கானவியிடம் கவிதை கேட்டேன்

அவள் கண்ணீரையே தந்தாள்..!

காரணம் கேட்டேன்,
கதறியபடி வார்த்தைகள் தந்தாள்!

கானவியின் வார்த்தைகளை
பொறுக்கிக் கொண்டு
என் உணர்வுகளை
எழுதலாம் என்றுதான்
ஆரம்பித்தேன்…

சில நாட்களாக
சில உணர்வற்ற
சில மானங்கெட்ட மனிதர்களால்
எதையும் சீராக 
எழுத முடியாமல்
சினந்து போனது என் மனது!
சிதைந்து போனது என் எழுத்து!
சிவந்து போகின…
என் விழிகள்!




விக்கித்து விக்கித்து
அழுகின்றேன்…
முனகி முனகி எழுதுகின்றேன்!

“இசைப்பிரியாவின் படத்தினை 
பதிவு செய்யாதீர்கள்
மனது வலிக்கிறது
என்கிறீர்கள்”

“உங்களின் அக்காள், தங்கை
படங்களினை…
இவ்வாறு பதிவிடுவீர்களா…?
மனது கொதிக்கிறது
என்கிறீர்கள்”

இவ்வாறு பல விதமான
வார்த்தை அம்புகளை
தூர இருந்து ஏவுகிறீர்கள்
நாங்களும்…
ஆறு வருடங்களாக…
உங்கள் வார்த்தை அம்புகளை
தாங்கிக் கொண்டோம்..!

நீங்களும்…
எம் தங்கையின் உருக்குலைந்த 
கோலங்களைப் பார்த்து
உங்களின் மனது கொதித்து

எதையாவது செய்வீர்கள் என…
செய்வீர்கள் என…

உணர்வுகளால்…
பொங்கி எழுவீர்கள் என…
பொங்கி எழுவீர்கள் என…

கோபமாகி…
தெருக்களில் இறங்கிப் 
போராடுவீர்கள் என…
போராடுவீர்கள் என…

உங்களின் நாடி நரம்புகளிலும்
உங்களின் எண்ண உணர்வுகளிலும்
எம் தங்கையின்
கதறல் ஒலி கேட்டு
எம் தங்கையின்
அவல நிலை பார்த்து
ஆடைகள்
அவிழ்க்கப் பட்டதைப் பார்த்தும்
துடிக்கத் துடிக்க
கொல்லப் பட்டதைப் பார்த்தும்
சினிமா கதாநாயகர்கள் போல்
நீங்களும்…
பொங்கி எழுவீர்கள் என
நம்பினோம்..!

ஒவ்வொரு வருடங்களும்
ஒவ்வொரு சந்தர்ப்பங்களில்
எம் தங்கையின்
இதழ்கள் உதிர்ந்து
இரத்தம் தோய்ந்த படங்களை
உங்களின் ரோச நரம்புகளுக்கு
தூண்டட்டும் என்று
பல தடவை பதிவிட்டோம்!




நீங்களோ…
எங்கோ தூரத்தில்
இருந்து கொண்டு
வார்த்தை அம்புகளை
ஏவி விட்டு
வாய்ச்சவுடால் வீரர்களாக.,
ஒவ்வொரு முறையும்
ஏவி விட்டு ஒதுங்கி விடுகிறீர்கள்..!
உங்கள் செயல் முறைகளில்
இதுவரை…
எந்த மாற்றங்களும் இல்லை!!!

எம் தங்கையின்
ஆடைகள் அவிழ்ந்த 
படத்தினைப் பார்த்து
உள்ளம் கொதிக்கிறதே என்று
வார்த்தை ஜாலங்களை
அள்ளி விட்டு….

பின்பு…
உங்கள் கனவுகளில்
கதாநாயகிகளின் ஆடைகளை
அவிழ்த்துப் போட்டு
கிள்ளி விட்டுத் தவிக்கிறது
உங்கள் வாழ்க்கை!

எத்தனை மனிதர்கள்
உட்கார்ந்த இடத்தில்
இருந்து கொண்டு
தன்மானத் தமிழனாக
வாய்ச்சவுடால் வார்த்தைகளை
அள்ளி வீசி விட்டு…

பின்…
அந்தி இரவுகளில்…
எத்தனை பெண்களின் 
ஆடைகளை அவிழ்த்து
உங்கள் மன்மத வித்தைகளை
அரங்கேற்றியிருப்பீர்கள்..! ஏன்
உங்கள் மனச்சாட்சியை
நீங்களே ஒரு தடவை
தொட்டுப் பார்த்துக் கேளுங்கள்???

ஒரு சிலரோ…
“எம் தங்கையைப் பெற்ற வயிறு
எப்படிக் கொதித்திருக்கும்”
என்றார்கள்..!

இன்னும் ஒரு சிலரோ…
“எம் தங்கையின்
சகோதரிகளின் மனது
எப்படி வலித்திருக்கும்”
என்றார்கள்..!
உண்மையில்
வலித்திருக்கும் என்பது
உண்மைதான்!
உண்மைதான்!!
உண்மைதான்!!!

எனக்கும் எனது மனது 
வலிக்கின்றது!
எனக்கும் எனது இதயம்
கொதிக்கின்றது!
என் மனைவியின் கண்கள்
கலங்கி அழுகின்றதாம்!
என் தாயின் வயிற்றில்
நெருப்பு எரிகின்றதாம்!
என் தோழிகளின் உடல்கள் கூசி
உள்ளங்கள் அழுது
கொதிக்கின்றதாம்!




நமக்கே…
இவ்வாறு இருக்கும் போது…
உயிரான உணர்வுகளை
இரத்தமாக்கி…
இரத்தத்தைப் பாலாக்கி
உயிர் கொடுத்து
வளர்த்தவளின் மனது
எப்படி அழுதிருக்கும்…
பெற்ற வயிறு
எப்படி வலித்திருக்கும் என்று
எனக்கும் தெரியும்தான்..!

ஒரே வயிற்றில் உயிராக்கப்பட்டு
ஒரே உயிரில் உருவாக்கப்பட்டு
ஒரே வீட்டில் கட்டியணைத்து
உருண்டு பிரண்டு
ஓடி விளையாடி
ஒன்றாக தூங்கி எழுந்து
உணர்வுகளோடு ஒன்றிப் போன
இவளின் – அந்த
நான்கு சகோதரிகளின்
இதயங்கள் எவ்வாறு துடி துடித்து 
அழுதிருக்கும் என்பது
எனக்கும் தெரியும்தான்..!
இருந்தாலும்…

இசைப்பிரியா யார்..?

அவள் தனிப்பட்ட மனிதர்களுக்கு
சொந்தமானவளா..?

அவளை யாரும் தனியாக
உரிமை கொண்டாட முடியுமா?
இல்லவே இல்லை!
ஒரு போதும் இல்லை!!

விடுதலைப் போராட்டத்தில்
இணைந்து விட்டால்…
இணைந்த அனைவரும்
அனைத்துத் தமிழர்களுக்கும்
சொந்தமானவர்கள்..!




அவர்கள் பொதுவானவர்கள்..!
ஈழத்தின் காவற்காரர்கள்..!
அதனால், தமிழர்கள்
அனைவருக்கும் சொந்தமானவர்கள்!
தனிப்பட்ட ரீதியில்
எவரும் இசைப்பிரியாவை
உரிமை கொள்ள முடியாது!

அவளின் உறவாக இருந்தாலும்
அவளின் பெற்ற தாயாக
இருந்தாலும்…
அனைத்து மக்களைப் போலும்
அவர்களும்…
வணங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!

தாய், சகோதரிகள் என்ற முறையில்
தனிப்பட்ட உணர்வுகளைக்
காட்டிக் கொள்ளாலாம்
அவ்வளவுதான்..!
வேறு எதுவும்
அவர்கள் பணிக்க முடியாது!

இசைப்பிரியா, அனைத்துத்
தமிழர்களுக்கும் சொந்தமானவள்!
நீங்கள் ஒவ்வொருவரும்
தனித்தனியாக…
உரிமைகள் எடுத்து
தனித்தனியாக கட்டளையிட…
அவள் உங்கள் வீட்டுப் பிள்ளை
சோபனா இல்லை!




தமிழர்கள் அனைவரும்
எல்லா உணர்வுகளோடும்
எல்லா உரிமைகளோடும்
கொண்டாடுகின்ற…
முள்ளிவாய்க்காலின்
“முல்லைத் தேவி” 
அவள்!

இனவாத காட்டு மிராண்டி
இலங்கை அரசிற்கும்
இரத்தம் குடித்த
காமப் பிசாசுகளான
முதுகு எலும்பற்ற
இலங்கை சாத்தான் படைகளுக்கும்
கனவிலும் பீதியைக்
கொடுத்துக் கொண்டிருக்கும்
“பத்ரகாளி” அவள்!

அவளை…
சாதாரண மனிதப் பிறவியாகக்
கருதி ஓலமிடும் ஓநாய்களே…!
உணர்வற்றுக் கிடக்கின்ற
தமிழர்களை – அடிக்கடி
தட்டி எழுப்ப வேண்டும் என்றால்…
என்ன செய்ய வேண்டும் என்று
நீங்களே சொல்லுங்கள்?!

கைக்கெட்டும் தூரத்தில்
துடிக்கத் துடிக்க
கதறக் கதற கொன்றழித்து
ஒன்றரை இலட்சம் உறவுகளை
மண்ணுக்குள் உரமாக
புதைத்த பின்பும் 
புதைத்த இடத்தில் இருந்து
புதிதாய் மரங்கள்
முளைத்து விட்டன…




உங்கள் உள்ளங்களில்
அந்த கோரக் காட்சிகளை
புதைத்த பின்பும்
அப்போதும்…
காப்பாற்ற முடியவில்லை!

ஐந்து வருடங்களாகி இன்றும்
சிதைக்கப் பட்டுக் கொண்டிருக்கும்
தமிழச்சிகளின் உயிர்ப் பைகளை
இப்போது வரைக்கும்
காக்கவும் முடியவில்லை!
காப்பாற்றவும் முடியவில்லை!!

உங்களின்…
உண்ணாவிரதங்கள்,
ஊர்வலங்கள்,
ஆர்ப்பாட்டங்கள்,
பேரணிகள் அனைத்தையும்
உங்கள் வீட்டு 
மொட்டை மாடிகளில்
நடத்துங்கள்…
நான்கு கொசுக்களுக்காவது
நிறைய இரத்தம் கிடைக்கும்!
உங்கள் அரசு 
எதுவுமே செய்யாது!

அட… அறிவு கெட்ட
ஜென்மங்களே..!
உங்கள் அரசியல் தலைவர்களின்
நாடக நடிப்புக்களை…
முப்பது வருடங்களுக்கு 
மேலாகப் பார்த்தும்…
இன்றுவரையும்…
சூடு சொரணையற்ற ஜென்மங்களாக…
திரும்பத் திரும்ப
இவைகளைத்தானே
செய்து வருகிறீர்கள்..?!
அந்தக் காலத்திலிருந்து
போராடுகிறீர்கள்…




ஆனால், இன்றும் 
மீனவன் கொல்லப்பட்டுக் 
கொண்டுதான் இருக்கிறான்!
அந்தக் காலத்திலிருந்து
போராடுகிறீர்கள்…
ஆனால், இன்றும் உங்கள் உறவுகள்
அகதிகளாக உலகம் முழுதும்
அலைந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்!
உங்கள் போராட்டங்களால்
என்ன மாற்றங்களைக்
கண்டீர்கள்.?

கன்னடன்…
காவேரி நீர் தரமாட்டான்..!
ஆந்திரன்…
கிருஸ்ணா நீர் தரமாட்டான்..!
கேரளத்தன்…
முல்லைப் பெரியாரை வைத்து
உங்கள் மூளைகளில் அடிப்பான்..!
நீங்களின் தண்ணீர் கேட்டு
கண்ணீர் விட்டு
பழையபடி போராட்டங்கள்
உண்ணாவிரதங்கள்,
ஊர்வலங்கள்,
ஆர்ப்பாட்டங்கள்,
பேரணிகள் என தொடரும்
உங்கள் அவலங்கள்..!

உங்கள் தலைவர்களும்
கடிதம் எழுதியே
கதைகள் சொல்லி
கவனங்களைத் திருப்புவார்கள்!
பிரச்சனைகள் தீர்வடையாது!
தொடரும் உங்களின் அவலங்கள்..!
வருடங்கள் பல கடந்தும்…
உங்கள் ஆயுள் முடிந்தும்…
உங்களின் பிள்ளைகளிலிருந்து
மறுபடியும் போராட்டங்கள்…..

ஆனாலும், 
எந்த மாற்றங்களும் உருவாகாது!
தெரிந்தும்,
நீங்கள் திருந்துவதாக இல்லை!
உங்கள் போராட்ட வடிவங்களும்
மாறுவதாக இல்லை!
மாற்றத்திற்குரிய தலைவனை
இன்னும் உங்களிடத்தில்
நான் பார்க்கவும் இல்லை!
பழைய புளித்துப் போன
போராட்டங்கள் 
எதுவுமே வேண்டாம்..!




ஆரம்பத்திலிருந்து…
பழகி வந்து பழைய
போராட்ட வடிவங்களுக்கு…
புதிய நீர் பாய்ச்சி
புதிய உரமூட்டி
புதிய வடிவங்களோடு…
புதிய சிந்தனைகளோடு…
கொதித்தெழுந்து
புதிய புரட்சியினை
உருவாக்க வேண்டும் என்றுதான்
உங்களைப் போன்றவர்களுக்கு
முத்துக்குமார், தன்னையே வைத்து
முன்னுரை எழுதி
புதிய எழுச்சியினைத்
தூண்டி – புதிய பாதையினை
துறந்து விட்டான்..!




ஆனாலும், அப்பப்ப
நீங்களும் மறந்து போகின்றீர்கள்!
உங்களை அப்பப்ப தட்டியெழுப்பி
உங்கள் உணர்வுகளையும்…
உங்கள் இதயங்களையும்
கொதித்து எழுச்சியடைய
வைக்கத்தான் – அப்பப்ப…
உங்களின் உணர்வற்ற உள்ளங்களுக்கு
இசைப்பிரியா, காட்சியளிக்கிறாள்..!

இசைப்பிரியாவின் உயிரற்ற உடலம்
பேசாமலே போயிருந்தால்…
உங்களின் உணர்வற்ற உள்ளங்களுக்கு
எதுவுமே தெரிந்திருக்காது!
தெரியும் என்று சொல்லாதீர்கள்..!

முப்பது வருடங்களாக…
ஈழத்தில் தமிழர்கள்
ஈவிரக்கமில்லாமல் துடிக்கத் துடிக்க
கொல்லப்படும் போது
நீங்கள் என்ன செய்து
கொண்டிருந்தீர்கள்..?
உங்கள் பிள்ளைகளையும்
உங்களைப் போலவே
உணர்வற்றவர்களாகவே
வளர்த்து வந்தீர்கள்..!
அவர்களும், திரைப்படம் (சினிமா)
மட்டைப் பந்துதான் (கிரிக்கெட்)
உலகம் என வளர்ந்தார்கள்..!

முள்ளிவாய்க்காலில்…
தமிழர்களை கொன்று குவித்து
குழந்தைகள், பெரியவர்கள் என
அனைவரினது உடலங்களை
அங்கங்கள் இழந்த 
சதைப்பிண்டங்களாக
பார்த்த பிறகும்…
தாயின் கர்ப்பத்திலிருந்து
கிழிந்து உயிரற்ற சிசுக்களாக
வெளியேறிய காட்சிகளைப்
பார்த்த பிறகும்…
ஈழத்துப் புது ரோஜாக்களின்
ஆடைகளை அவிழ்த்தும்
ஈழத்துக் காவல் தெய்வங்களின்
ஆடைகளை அவிழ்த்தும்
தெரு நாய்களைப் போல்…
கூட்டம் கூட்டமாக 
கற்பழித்து கொன்று விட்ட
ஆடையற்ற எம் சகோதரிகளை
படங்களாக பார்த்த பிறகுதான்…




தமிழகத்தில் மானமுள்ள தமிழர்கள்
பொங்கி எழுந்தார்கள்..!
ஈழத்து உறவுகளை
அரவணைத்து அணைத்தெடுக்க
துடியாய்த் துடித்தார்கள்..!
ஆனாலும்…
போராட்டங்கள் மாறவேயில்லை!
பழைய பாணிதான்..!
சில மாதங்களில்
மறந்து போகிறீர்கள்…!

புறநானுற்றுத் தமிழனாக…
நீங்கள் அனைவரும் மாறி
தமிழர்களைத் தமிழர்களே
ஆள வேண்டும் என்றும்..!
உங்களின் எதிர்ப்புக்கள்
ஒவ்வொன்றும்…
துப்பாக்கிகளின் ரவைகளாக…
தாக்க வேண்டும் என்றுதான்
அடிக்கடி உங்களின் சகோதரி
இசைப்பிரியாவின் படங்களை
பதிவு செய்து…
உங்களின் மனச்சாட்சியின் பார்வைக்கு
அனுப்பி வைக்கப் படுகிறது..!

முப்பது வருடங்களாக
இலங்கையில் கொன்றழிக்கப்பட்ட
தமிழர்களுக்கு நீதிகள் கிடைக்கவில்லை
காரணம், காட்சிகள் பதிவுகள்…
இல்லாமல் போனதால்
தமிழர்களின் சிதைக்கப்பட்ட கதைகள் 
வரலாறாக சொல்லியும்
கவனத்தில் எடுக்கப்படவில்லை!
இப்போதுதான்… 

வரலாற்றுக் கதைகள் இல்லாத
சிதைக்கப்பட்ட தமிழர்களின் 
காட்சிகளும்…
சீரழிக்கப்பட்ட தமிழச்சிகளின்
உருக்குலைந்த காட்சிகளும்…
படங்களாக பதியப்பட்டதனால்தான்…
குருடாகிப் போன…
சர்வதேசத்தின் பார்வையில்
ஊசியாகக் குத்தி நிற்கின்றது!

தமிழகத்தில் தூங்கிய தமிழனையும்…
உலகத்தில் அகதிகளாக 
அலைந்து கொண்டு
ஏங்கிய தமிழனையும்…
சர்வதேசத்தின் துருப்பிடித்த 
இதயங்களையும் – ஈரமாக்கி 
இரத்தம் கசிய வைத்துக்
கொண்டிருக்கிறது..!




இலங்கை மீது…
அடுக்கடுக்கான அழுத்தங்களும்
போர்க்குற்றவாளியாக…
உலகத்தின் பார்வைக்கு
கொண்டு செல்லவும்
இக்காட்சிகள்தான்…
சாட்சிகளாக மாறி வருகின்றது!

இலங்கை அரசும் நழுவிக் கொண்டு
போகப் போக… – மேலும் மேலும்
சாட்சிகள்… காட்சிகளாக வந்து
இலங்கையின் கழுத்தை நெரிக்கின்றது!
எட்டுக் கோடி தமிழர்களின்
உணர்வுகளால்…
செய்ய முடியாத ஒன்றை..!

இசைப்பிரியாவின் உயிரற்ற
உடலம் செய்கின்றது என்றால்…
அவளின் புனித உடலை
வலிகளோடு பார்க்காமல்…
கடவுளின்…
உருவச் சிலையாகப் பாருங்கள்!
வாய்ச்சவுடால் வீரர்களாக நீங்கள்…
உயிரோடு இருந்து
கிழிக்க முடியாததை…
இசைப்பிரியாவானவள்…
உயிரற்ற உடலமாக
உலகத்தின் மனக்கதவுகளைத் துறந்து
இலங்கையின் முகத்திரையை
நார் நாராக…
கிழித்துக் கொண்டு இருக்கிறாள்!

இசைப்பிரியாவோடு…
கசக்கி எறியப்பட்ட
பல பெண் காவல் தெய்வங்களின்
இரத்தம் தோய்ந்த படங்கள்தான்
உணர்வற்ற தமிழர்களுக்கு
உணர்வுகள் ஊட்டிக் கொண்டிருக்கிறது.
பல மாற்றங்களை…
உருவாக்கிக் கொண்டு இருக்கிறது!

இசைப்பிரியா…
உயிரோடும் தாய்மண்ணின்
விடுதலைக்காகப் போராடினாள்!
உயிர் போகும் போதும்
வலிகளோடு போராடினாள்!
உயிர் போன பின்பும்
உயிரற்ற உடலாக…
படங்களில் பதிவாகி
தமிழர்களின் விடிவிற்காக
போராடி வருகிறாள்!!!




1972 ஆம் ஆண்டிலே…
வியட்நாம் போரின் போது
ட்ராங் பாங்க் என்னும் ஊரிலே
கிம் புக் என்ற சிறுமி…
ஆடையற்று அலறிக் கொண்டு
நிர்வாணமாக ஓடிய அந்தப் படம்தான்…
வியட்னாம் போரை நிறுத்தியது!

2009 ஆம் ஆண்டிலே… ஈழத்தின் 
முள்ளிவாய்க்கால் எனும் ஊரிலே…
எங்களின் சகோதரி இசைப்பிரியா
ஆடைகளற்று உயிரற்ற
உடலத்தைத் தாங்கிய படம்தான்
ஈழ மக்களுக்கான… 
புது விடியலை உருவாக்கி வருகிறது!

இவ்வாறான நேரங்களில்…
உங்களின் மட்டுப்படுத்தப்பட்ட
சுயநலப் புத்திகளால்…
விடியலைக் கெடுத்து விடாதீர்கள்!
வியர்வை சிந்தாமல்…
இரத்தம் சிந்தாமல்…
வலிகள் இல்லாமல்…
விடுதலை கிடைக்காது!

நாட்டிற்காக என…
தன்னை அர்ப்பணித்தால்…
எல்லாவிதமான வலிகளையும்
ஏற்கத்தான் வேண்டும்!
மறைமுக பெண்கரும்புலிகளின்
வலிகள் கூடிய வாழ்க்கை வரலாறுகளை
நான் இங்கே எழுத ஆரம்பித்தால்…
உங்கள் இதயங்களில் இருந்து
இரத்தம் ஒழுகும்..!
உங்கள் விழிகளின் கண்ணீரெல்லாம்
செந்நீராக மாறும்!
துக்கங்கள் கூடி…
உங்கள் தூக்கங்கள் கலையும்!

அதே போல்…
இசைப்பிரியாவும்
வார்த்தைகளால் சொல்ல முடியாத…
மரண வலிகளோடு…
ஈழத்தின் விடிவுற்காக…
மடிந்த ஆயிரமாயிரம் மாவீரர்களோடு
மாவீரராகக் கலந்து விட்டாள்..!

ஈழத்தமிழர்களின்…
இதய தெய்வமாகி விட்டாள்!

தயவு செய்து
அவளின் புனித உடலை…
கடவுளின் சிலையாகப் பாருங்கள்!

வல்வை அகலினியன்
          (03.11.2013)

குறிப்பு
என் தாய்,
என் அக்காள்,
என் தங்கை,
என் மனைவி,
என் குழந்தைகள் என
எவராயினும்..
விடுதலைப் பாதையில் பயணித்தால்…
இதைத்தான் குறிப்பிடுவேன்..!
“இனத்தின் விடிவிற்காக
தனது மானத்தையே 
ஆகுதியாக்கியவர்கள்” என 
கல்வெட்டில் பதிப்பேன்.




இந்தக் கவிதையின் இணைய வடிவம்: 

1, விவசாயி இணையம்
2, வெளிச்சவீடு இணையம்
2, www.vvtuk.com
3,
4,