முகநூல் போலிகளும்... அம்மணமான உடல்களும்..!!

முகநூல் போலிகளும்...
அம்மணமான உடல்களும்..!!




எந்தவொரு கொலைக்காரனும்...
எந்தவொரு கொள்ளைக்காரனும்...
எந்தவொரு காமூகனும்...
எந்தவொரு சமூக விரோதியும்...
எந்தவொரு உளவாளியும்....

தன்னுடைய போலி முகநூலில் தன்னைப் பற்றி அயோக்கியன் என்று ஒருபோதும் சொல்லிக் கொள்வதில்லை!!!

மாறாக... 

தான் ஒரு சமூக சிந்தனைவாதி என்றும்...

தான் ஒரு விடுதலைப் போராட்டப் போராளி என்றும்...

தான் ஒரு தமிழ் உணர்வாளன் என்றும்...

பெண்களின் உண்மையான பாதுகாவலன் என்றும்... 

இன்னும் பலவகையான போலி அடையாளங்களோடும் இந்த முகவரியற்ற முகநூல்களில் தான் ஒரு யோக்கியன் என்றவாறு...

பல ஆசை வார்த்தைகளை விதைத்து... 

பலரின் எண்ணங்களைச் சிதைத்து...

பலரின் வாழ்வினைச் சீரழித்து...

துக்கங்கள் பல கொடுத்து...

தூக்கமில்லா இரவுகளுக்குள் தள்ளிவிடுகிறார்கள்.!!!

இந்தப் போலி நாயகர்களை தங்கள் கனவு நாயகனாக நம்பித் தொலைத்து...

தம் அந்தரங்க விடயங்களை பகிர்ந்து அந்தரத்தில் தொங்கவிட்டு...

போலிப் புகைப்படங்களை நம்பி காதல்... காம... மயக்கங்களால் மெய்மறந்து...

அச்சம், மடம், நாணம் அனைத்தையும் ஒரேயடியாக இழந்து...

அவர்களின் முகநூல் தனிச்செய்திகளில் (inbox) ஆடைகளற்று அம்மணமாக அலைகிறது நிஜப் புகைப்படங்கள்..!

முன்பெல்லாம்...
உண்மைக்காதலில் இதயத்தைத்தான் கொடுப்பார்கள்...

அந்தக் காதல் தோல்வியில் முடிந்தாலூம் சோகத்தைத்தான் காட்டிக் கொள்வார்கள்..!

இந்த முகநூல் போலிக் காதலில் ஆடைகளற்ற உடலையல்லவா விதவிதமாக படம் பிடித்து அனுப்புகிறார்கள்..!

பின்பு உண்மை தெரிந்தவுடன் காதல் பொய்த்து விடும்.!!

பொய்யான காதல் உடலை பலருக்கு விற்பதுடன், உயிரையும் தூக்குக் கயிறு கொண்டும்... நஞ்சு மருந்து கொண்டும் அரவணைத்துக் கொள்கிறது!

இந்த கொடூரமான வலிகள் நிறைந்த உண்மைகள் பலருக்கு தெரியாமலேயே மறைக்கப்படுகிறது!!

பாதிக்கப்பட்ட சிலர் இறந்து விடுவதுடன் மீதமுள்ளவர்கள் முகநூலுக்கு முற்றுப்புள்ளி வைத்து மூடி விடுகிறார்கள்.

அதனால், விழிப்புணர்வு என்பது பலருக்கு இல்லாமலே போய் விட்டது!

அதனால்தான் போலிகளின் வேட்டைகளும் தொடர்கின்றது!

முகநூலில் ஐயாயிரம் நண்பர்கள் வைத்திருப்பது பெருமையல்ல...

ஐம்பது உறவுகள் என்றாலும் அவர்களை ஆராய்ந்து அளவோடு வைத்துக் கொள்வதுதான் சிறப்பு!

நன்கறிந்து கொண்ட அளவான நண்பர்களை வைத்துக் கொண்டவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

அறிந்திராத அளவற்ற நண்பர்களை வைத்துக் கொண்டு போலி வார்த்தைகளை நம்பிக் கொண்டு அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்பவர்கள்தான் அவதியுற்று அவஸ்தையோடு வாழ்கிறார்கள்!

முகநூல் என்பது முகவரியற்ற முகம் தெரியாத போலிகளின் கலைக்கூடம்.!

ஆகையால், நன்கு அறிமுகமான முகம் முகவரி தெரிந்த உறவுகளை மட்டுமே உங்கள் நட்புக்குள் இணைத்து...

பாதுகாப்பாகவும்... மகிழ்வோடும் வாழ்ந்திடுங்கள்... உங்கள் பெற்றவர்களையும் மகிழ்வித்துக் கொள்ளுங்கள்.. 

-  வல்வை அகலினியன் 

             (08.11.2014)

"காகிதப் பூக்கள்
கண்களைக் கவர்வதால்...
நிஜப் பூக்கள் வாழ்வினில்
நிம்மதியை இழந்து விடுகின்றன"

0 comments:

Post a Comment