நரி... நாய் வேடம் போட்டாலும்... ஊளையிட்டுத்தான் ஆக வேண்டும்!!!

நரி... நாய் வேடம் போட்டாலும்... ஊளையிட்டுத்தான் ஆக வேண்டும்!!!


இவ்வாறான படங்களைப் பார்க்கும் போது... சில தமிழகத் தலைவர்கள் மீது காறி உமிழ வேண்டும் போல் உள்ளது!

தேசியத் தலைவருக்குப் பக்கத்தில் நின்று எடுத்த படங்களை முக்கிய தேவைக்கேற்ப பதிவு செய்வதும்... அவரது படத்தை முக்கியத்துவப் படுத்தி தங்களது படங்களோடு சுவரொட்டி, அழைப்பிதழ்கள் மற்றும் ஆடைகளில் பதிவிடுவது வரவேற்கத்தக்க விடயமே!

அதற்காக...

இவ்வாறான அவர் முகத்தோடு தங்களது முகத்தையும் பதிவு செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கதொன்று. எந்தவொரு தமிழ் உணர்வாளனும் இவ்வாறான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். ஏன், "சிறுத்தைகள்" கட்சியில் உள்ள தமிழ் உணர்வாளன் கூட இதை நிச்சயமாக மறுப்பான்!

இவ்வாறான படங்களைப் பதிவு செய்து இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? தாங்களும் தேசியத் தலைவர் போன்ற ஒரு மாபெரும் வீரன் என்று சொல்ல வருகிறார்களா???அல்லது தாங்களும் தலைவர் போன்ற மக்களின் மனமறிந்த தலைவன் என்று சொல்ல வருகிறார்களா?

என்னதான் ஆயிரமாயிரம் தலைவர்கள் வந்தாலும்... தேசியத் தலைவருக்கு நிகராக யாரும் ஈடாக முடியாது!

முதலில், அவரோடு படத்தை இணைத்துப் போடுவதற்கு ஒரு தகுதி வேண்டாமா? கட்சித் தலைவர் என்றால்... எல்லாத் தகுதிகளும் வந்துவிடுமா என்ன??? அப்படி என்னதான் மக்களுக்காக சாதித்தார்கள் இவர்கள்??? ஒரு துளி இரத்தம் சிந்தியிருப்பார்களா?

இந்தப் படத்தை.... அவரின் விசுவாசிகள் பார்த்து விட்டு இது தங்கள் கட்சித் தலைவருக்கு தெரியாது என்றும்... இது யாரோ ஒரு கட்சித் தொண்டனின் வேலையாக இருக்கும் என்றும்... இங்கே கருத்துப் பதிவிட போட்டி போட்டு வரிஞ்சு கட்டிக் கொண்டு வருவார்கள்....

அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவெனில்....

இந்தப் படமானது நான்கு மாதங்களுக்கு முன்னர் நான் துபாயில் வெளி உலகம் தெரியாமல் இருக்கும் போது பார்த்தேன்...

பின்னர்... தற்போதும் பிரேசிலில் இருக்கும் போதும் ஒரு சிலரின் முகநூலில் இதைப் பார்த்து இந்தப் படத்தை சேமித்து என் ஆதங்கத்தை மட்டுமே.... இங்கே பதிவிடுகிறேன்...

அவரின் கட்சி சாராத... தமிழர்கள் இல்லாத தேசத்தில் எனது கண்ணுக்கு இந்தப் படம் தென்படும் போது... ஏன் அவரின் கட்சித் தொண்டர்கள் ஊடாகவும்... தனக்கு இருக்கும் அதீத தொடர்புகள் ஊடாகவும் இதைத் தெரிந்து கொள்ள முடியாது??? அல்லது தெரிந்து கொண்டும் தனது பெருமைக்காக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாரா?

(தேசியத் தலைவனின் பெருமையறிந்த கட்சித் தலைவனாக இருந்தால்.. நிச்சயமாக இதைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட விட்டிருப்பார்)

எந்த அரசியல் தலைவனாக இருந்தாலும்... தேசியத் தலைவர் அவர்களை உங்கள் உள்ளத்தில் சுமந்து கொள்ளுங்கள்... மாறாக, அவரின் உருவத்தோடு சரிபாதியாக இணைத்துக் கொள்ள நினைக்காதீர்கள்!! உங்களுக்கு அதற்கான தகுதிகளும் இல்லை!!!!

நீங்கள் அரசியல்வாதிகள்..! தேசியத் தலைவர் அவர்கள் புரட்சியவாதி!! நீங்கள் அரசியலுக்காக கல்லிலே நார் உரிப்பவர்கள்!! தேசியத் தலைவர் அவர்கள், மக்கள் மனதில் உயிராக இருப்பவர்!!

எந்தவொரு உண்மையான தமிழ் உணர்வாளனும் தன்னைப் பெற்ற தாயோடு கூட இவ்வாறான படத்தை இணைத்து அழகு பார்ப்பதில்லை!!! ஒரு தாயானவள், தான் பெற்ற குழந்தைகளுக்கு மட்டும்தான் தாயாவாள்!! நம் தலைவனோ... கருணை உள்ளமும், காவல் குணமும் கொண்டு அனைத்து தமிழர்களுக்கும் தாயுமானவர்!!!

ஏன், தாய்மண்ணின் விடிவிற்காக தன்னுயிரையே கொடுத்து மடிந்து போன ஒரு மாவீரனின் படத்தோடு கூட எந்தவொரு உணர்வுள்ள தமிழனும் இவ்வாறு இணைத்து அழகு பார்ப்பதில்லை!!! ஏன், அந்த மாவீரர்களுக்கில்லாத உரிமையா? ஆனால், அது முறையல்ல...!

எப்போதும் எங்கள் தலைவன் ஒருவரேதான்!!! இந்த நூற்றாண்டின் இவ்வுலகின் மாபெரும் வீரத் தலைவரும் அவரே!


நீங்கள், எப்படி வேடம் போட்டாலும்... ஊருக்குள் வந்து ஊளையிடும் போது உங்கள் வேடம் கலைந்து விடும்! ஆகவே இருக்கின்ற மரியாதையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள். இவ்வாறான செயல்களைக் கண்டும் காணமல் இருந்து கொண்டு... நீங்களும் இறுதியில் காணாமல் போய் விடாதீர்கள்!!!

"தமிழீழ விடுதலைப் புலிகள்"
"தமிழக விடுதலைச் சிறுத்தைகள்" இதிலும் எங்கோ உதைக்கிறது??? (வார்த்தைகளையும்... அர்த்தத்தையும் கவனிக்கவும்) இந்தக் கருத்தோடு இந்தப் படத்தையும் பார்க்கும் போது... பல கேள்விகளையும் பலருக்கு எழுப்புகிறது!!!

எனவே...

சிவாஜி... எம்ஜிஆர் ஆக முடியாது! 
எம்ஜிஆர்... சிவாஜி ஆக முடியாது!!

யாரும், யாரையும் போல் ஆகி விட முடியாது!!!
நீங்கள்... நீங்களாகவே இருங்கள்! அதுதான் எல்லோருக்கும் நல்லது! உங்களுக்கும் நல்லது!

- வல்வை அகலினியன்
               (04.01.2015)

இந்தப் பதிவும் இணைய வடிவம்:
1, வெளிச்சவீடு இணையம்
2, ஈழதேசம் இணையம்
3, www.eelamview.com


0 comments:

Post a Comment