தேவைகள் ஏற்படும் போது... தேடினேன்...

தேவைகள் ஏற்படும் போது...
தேடினேன்...

உணர்வுகளால்...
தொட்டுவிடும் தூரத்தில்
இருந்து கொண்டும்....

வார்த்தைகளால்...
பதிவுகள் பல செய்தும்
எந் நேரத்திலும்
உலாவிக் கொண்டும்...

முகநூல்களில் வந்து போகும் சிலர்...

என் தேவைகளின்
நியாயங்களை அறிந்தும்..
என் தேடல்களின்
வலிகளை உணர்ந்தும்

என் தேவைகள்...
என் தேடல்கள்...
என்பவற்றைச் சிதைத்து
தொலை தூரத்தில் நின்று
வேடிக்கை பார்த்து...

நானாக...
தேடி வந்து வேதனைகளில்
அழுகின்ற போதெல்லாம்...
உறவுகளின் பெயரால்
பாசங்களை விதைத்து
ஆசைகளைக் காட்டி
உணர்வுகளை நசுக்கி
கொன்று புதைத்து விட்டு...

பின்பு...

தேவைகளே இல்லாமல்
நான் இருக்கும் போது...

மற்றவர்களின்
தேவைகள்... தேடல்களின்
வலிகள் உணர்ந்து...
ஆழம் உணர்ந்து...
அவசியம் உணர்ந்து...
அனைத்துத் தேவைகளையும்
பூர்த்தி செய்து
அனைத்து தேடல்களையும்
முழுமை பெறச் செய்து...
அனைவரையும் உணர்வு கொண்ட
புனிதமான உறவினால்
உயிராக்கும் பொழுதினில்...

இப்போது... என்னிடம் வந்து
என்ன தேவையென்றால்...

என் தேவையை எவ்வாறு சொல்வேன்.

தேடல்கள் ஊடாக தேடித் தேடி
கிடைக்காத ஒரு தேவையை...

தற்போது தேடல்களே
கொள்ளாத போது...

என்னைத் தேடி வந்து...
என் தேவைகள், என்னவென...
தேட முற்படுவது ஏன்???

அன்று தேவையில்லாத நான்...
இன்று தேவைப்படுவதாலா..?

அல்லது...
சுடப்பட்ட தங்கம் பிரகாசிப்பது போல்
துன்பப்பட்ட நான்
ஒளிவீசும் மெழுகாக எரிவதாலா??

- வல்வை அகலினியன்
           (15.11.2015)

0 comments:

Post a Comment