புலிகளின் தலைவரின் சிறு பராய உருவத்தில் அதிசயச் சிறுவன் என கூறுகின்றனர்…

தேசியத் தலைவரின் சிறு வயதுப் புகைப்படம் என்பது வேறு ஒருவருடையது, நம்ப வேண்டாம்.!!!

மின்னுவதெல்லாம் பொன்னல்ல..
R. Prabhakaran, Bankloor, India.
சிறு வயதில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் முகம் வட்ட வடிவமாகவும், அழகாகவும், கண்கள் பிரகாசமாகவும், பார்வையில் ஒரு தெளிவும்… தேடலும் இருந்தது. அந்தச் சிறுவயது தலைவர் படத்தோடு சரியான தேடலும், தெளிவும் இல்லாமல் வேறு யாருடைய படத்தையும் வைத்து ஒப்பிடு செய்து பார்க்காதீர்கள்!

தேசியத் தலைவர் உலகப் புகழ் பெற்ற ஒருவர். இணையத் தேடு தளங்களில் “Prabhakaran young age photos” என்று தட்டச்சு செய்து தேடினால், அவரின் அனைத்து படங்களும் பார்வைக்கு வந்து விடும். இவ்வாறு அனைத்துப் படங்களும் இலகுவாகக் கிடைத்து விடும் போது…. சம்மந்தமே இல்லாத வேறு ஒரு சிறுவனின் படத்தை வெளியிட்டு “சிறு வயதில் பிரபாகரன்” என முகநூல்களில் பதிவு செய்து வெளியிடுமளவிற்கு வெளியிடுபவர்களின் அறிவு மழுங்கிப் போனதான் காரணம் என்னவோ தெரியவில்லை!!!


தயவு செய்து திரும்பவும் இதே போன்ற படங்களை “சிறு வயதில் தலைவர் பிரபாகரன்” என முகநூல்களில் பதிவிட்டு எம் தேசியத் தலைவரோடு ஒப்பிடு செய்யாதீர்கள்.


எம் தமிழனத்தின் தேசியத் தலைவரை அனைவரும் போற்றி வணங்குகின்ற  கடவுளோடு மட்டுமே ஒப்பிட முடியும். வேறு எவருடனும் ஒப்பிடுமளவிற்கு இவ்வுலகினில் எம் தலைவனைப் போல் எவரும் இல்லை..!

“மின்னுவதெல்லாம் பொன்னல்ல..”

         (30.12.2013)

மேற்கண்ட ஆர். பிரபாகரன் என்ற சிறுவனின் பற்றிய புகைப்படமும் விபரமும்: /www.ivtindia.org/

இந்தப் பதிவின் இணைய வடிவம்: 

0 comments:

Post a Comment