மாற்றம்..!

மாற்றம்..!

எதிர்பார்ப்புகளே....
இல்லாமல் இருந்த எனக்கு
உன்னை பார்த்த
முதலில் இருந்து.....
எதை எதையோ தேடுகிறது!
நல்லதோ.....
கெட்டதோ....
எதுவென்று எனக்குப் புரியவில்லை.
சொல்லவும் தெரியவில்லை
வழியதுவும் சொல்ல முடியவில்லை!

வெற்றிடமாக இருந்த
என் உள்ளத்தில்...
உன் நினைவுகள் மட்டும்
ஏதேதோ செய்து
முழுமையாக்கியுள்ளது!
அதுதான் எப்படி என்று
தெரியவில்லை!

என் எண்ணங்கள் கூட
வண்ணங்கள் ஆகியுள்ளது.
வார்த்தைகள் கூட
வாத்தியங்கள் வாசிக்கின்றன...
சில வேளைகளில்
தத்துவங்கள் ஆகுகின்றன....
வரம்பு மீறிப் போகாமல்
உன் நினைவுகள்
வேகத்தடை போடுகின்றன...!

எல்லாவற்றையும்
அழகாகப் பார்க்கச் சொல்லுகிறது.
பார்த்தவைகள் எல்லாவற்றையும்
அழகாக இரசிக்கச் சொல்லுகிறது.
மதியிழந்து போகாமல்
நிதனாமாக சிந்திக்கச் செய்கிறது.
அடங்காப் பிடாரி என்னை
அடக்கமுள்ளவனாக  ஆக்கியுள்ளது.
நடை உடை பாவனையில்
பல மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது...!
இந்த மாற்றங்கள் அனைத்தும்
எப்படித்தான் வந்தது என்று
புரியவில்லை,
சொல்லவும் தெரியவில்லை!
விவரிக்கவும் முடியவில்லை!

காதலும் இல்லை!
காமமும் இல்லை!
இருந்தாலும் என்னவென்று
சொல்லவும் தெரியவில்லை!
அதனால்தான்....
இந்த மாற்றத்திற்குரிய விடையை
உன்னிடமே தேடுகின்றேன்....! 
 
                   (27.01.2009)

0 comments:

Post a Comment