நான் தீவிரவாதி!!!

நான் தீவிரவாதி!!!


இலங்கை அரசோ....
ஈழத்தில் பிறந்து விட்டதனால்...
என்னை பயங்கரவாதி என்று
நாட்டிற்குள் நுழையத்
தடை போட்டுள்ளது.!!!
இந்திய அரசோ...
அகதியாகச் சென்றதனால்...
என்னைத் தீவிரவாதி என்றும்...
கடத்தல்காரன் என்றும்
பல வழக்குகளைப் போட்டு
தேடி வருகிறது.!!
ஒரு சில
முகநூல் போலிகளோ....
என்னை இலங்கை அரசின்
உளவாளி என்றும்...
இந்திய அரசின்
உளவாளி என்றும்...
பல விருதுகள் தந்து
கௌரவிக்கிறார்கள்.!!
அகதியாக வாழ்ந்ததனால்
என்னவோ...
அந்த வாழ்வின் அவலம் அறிந்து
துன்பப்படும் உறவுகளுக்கு
உதவிடத் துடித்தால்...
கொள்ளைக்காரன் என்கிறார்கள்.!!
தாய் மண்ணின் விடிவிற்காய்...
மடிந்து போன மாவீரர்களின்
தியாகங்களைக் கண்டும்...
முள்ளிவாய்க்கால் மண்ணில்
புதையுண்ட போன உறவுகளின்
அவல நிலை கண்டும்...
தீராத வலிகளுடனும்...
ஆறாத வடுக்களுடனும்...
வரிகள் கொண்டு விதைத்து வந்தால்
பெயருக்காக எழுதுகிறேன் என்கிறார்கள்...
அதிகம் கற்காத..
முகவரியற்ற என்னைப் பார்த்து!!!
ஒரு பெண்ணைக் காதலித்தால்....
வீட்டிலுள்ள பெற்றோர்களின்
எதிர்ப்புப் போல...
தாய்நாட்டைக் காதலித்ததனால்...
இலங்கை அரசாலும்...
தரங்கெட்ட மனிதர்களாலும்
எதிர்க்கப்படுகிறேன்!!!
சொந்த நாடுமின்றி....
புகுந்த தாய்த்தமிழ் நாடுமினறி...
உறவுகளை இழந்த அனாதையாக..
இன்றும்... அந்நிய தேசத்தில்...!!!
இருந்தும், நான் தீவிரவாதிதான்!!!
என் தேசத்தை
தீவிரமாக நேசிப்பதால்.!! 

          (03.03.2015)
இதன் இணைய வடிவம்:

0 comments:

Post a Comment