ஈழத்தமிழர்கள் தான் திருட்டுத்தனமாக தமிழ் திரைப்படங்களை வெளியிடுகிறார்களாம்..!!
ஈழத்தமிழர்களுக்கு வேற வேலையே இல்லையா???
மூன்றாவது திருமணம் செய்து ஜெயலலிதாவின் காலை நக்கிப் பிழைக்கும் சரத் குமார் போன்றவர்களுக்கு ஈழத் தமிழர்களை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது?
■ புதிய திரைப்படங்களை வெளியிடும் www.thiruttuvcd.com இணையத்தளத்தை ஈழத்தமிழன் நடத்துகிறனாம்… இவரு பெரிய உளவுத்துறை அதிகாரி கண்டு பிடித்திட்டாராம்!!!!
■ ஈழத்தமிழர்கள் அவர்களது பேச்சிலும்… எழுத்திலும் “திருட்டு” என்கிற வார்த்தையை “களவு” என்றுதான் சொல்லுவார்கள்… ஒரு போதும் “திருட்டு” என்கிற வார்த்தையை பயன்படுத்தியதில்லை!
■ உங்கள் திரைப்படங்களின் வெளிநாட்டு உரிமைகளை பல கோடிகள் கொடுத்து வாங்கி இன்று கூட தமிழக நடிகர்களின் கோடிக்கணக்கான சம்பளங்களை நிர்ணயிக்கும் வரிசையில் ஈழத்தமிழரே உள்ளனர்.
■ நீங்கள் எப்போதாவது ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என போராடிய சரித்திரம் உண்டா?
■ தமிழகத் திரைப்படத் துறையினரில் ஒரு சிலரைத் தவிர மீதி அனைவரும் 2009 ஆம் ஆண்டின் பிற்பாடு முள்ளிவாய்க்காலில் நம் உறவுகள் துடிக்கத் துடிக்க கொன்று அழிக்கப்பட்ட பின்புதான் ஆடிக்கு ஒரு தடவையும்…. ஆவணிக்கு ஒரு தடவையும் போராட்டம் பண்ணுகிறீர்கள்…
■ தமிழக இளைஞர்கள்… மாணவர்களுடன் தமிழகத்தின் அடிமட்டத் தொண்டர்களான சராசரி பொதுமக்கள்தான்… இன்று வரையும் தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து போராடி வருகிறார்கள்..
■ மாணவர்கள் போராட்டம் பற்றி நெகிழ்ந்து நடிகர் கமல்ஹாசன் அவர்களே பாராட்டி திரைப்படத் துறையினரானவர்கள்… மாணவர்கள் போராட்டத்தைக் குழப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
■ முதலில் திரைப்பட நடிகர்கள் அனைவரும் உங்களின் கோடிகளான சம்பளத்தை குறையுங்கள்…. அப்போதுதான் திரையரங்குகளில் டிக்கெட் விலை மிகவும் குறையும்! டிக்கெட் விலை குறைந்தால் அனைத்து திரைப்பட ரசிகர்களும் திரையரங்கு தேடி வந்து உங்கள் திரைப்படத்தை ரசிப்பார்கள்!!
இனியும் ஈழத்தமிழர்களை நீங்கள் இப்படி கீழ்த்தரமாக விமர்சிப்பீர்களாக இருந்தால், தமிழர்கள் வாழுகின்ற எந்தவொரு நாட்டிற்கு சென்றாலும்…. அதற்குரிய விருதினை வாங்கியே தீர வேண்டும்!!!!
0 comments:
Post a Comment