மொட்டான விபூசிகா.... மலராகி விட்டாள்!!!

உங்களின் வாழ்த்துக்கள்தான் என்ன???


நேற்று
ஈழத்து மொட்டுக்களில் 
ஒருத்தியாக இருந்தவள்...

நேற்றைய முன்தினம்
அடைபட்டிருக்கும்
கூட்டிற்குள்ளேயே...
பெற்றவளின்றி
வலிகளோடு...
பூப்பெய்து விட்டாள்!!!

கருவறையில் 
மொட்டாகியவள்...
சிறையறையில் அழகான 
பூவாகிப் போனாள்!!

தான் பூப்பெய்து 
பூவாகிப் போன 
அத்தருணங்களில்...
அம்மா வந்து மகிழ்வோடு
அரவணைப்பாளோ.??
தன்னை மடியதனில் 
தாங்குவாளோ.??
உச்சி முகர்ந்து
உட்கார வைத்து
தண்ணீர் கொண்டு
தனக்கு ஊற்றுவாளோ.??
இன்னும்... இன்னும்
பல ஏக்கத் தவிப்போடு
ஏங்கி... ஏங்கியே...
அந்தச் சிறு வயதுப் பாலகி
பல ஆசைகளோடு....
மலராகிய அன்றே
வாடிப் போயே விட்டாள்!!!

இவள் மொட்டாக இருந்த
இத்தனை காலம் வரையும்...
நாம் என்ன செய்தோம்????
என்ன செய்ய நினைத்தோம்????!!!
ஏதாவது உருப்படியாக செய்தோமா???
இல்லவே இல்லை! !!

மொட்டாக இருந்த போதே...
இவளின் வாழ்க்கை
இருளுக்குள் மூழ்கியது! !!

இப்போதோ, இவள்...
அழகிய ரோஜப் பூவாகி விட்டாள்!!

வெளிச்சத்தில் சீரழிக்கப்பட்டு
கசக்கி எறியப்பட்ட
நம் ஈழத்து மலர்களின் 
குருதி படிந்த வாழ்க்கைதனை
நாம் அனைவரும் அறிவோம்!!!

வெளிச்சத்தில் 
பாய் விரித்தவர்களெல்லாம்
இருளுக்குள்ள்... எப்படி
என்னவெல்லாம் செய்வார்களென...
நான் சொல்லத் தேவையில்லை..!
நீங்களே அறிவீர்கள்!!!!

ஆகையாலே..
பூப்பெய்தவள் உடல்நிலை அறிந்து...
பூத்தவளின் உளநிலை அறிந்து...
பெண்கள் தினமான இன்று
அவளின் ஏக்கத்தோடு
அவள் சார்பாக....
உங்களிடம் என் கண்ணீரை
வரிகளாக விதைக்கிறேன்!!!



நீங்கள் அனைவரும்
வீதியில் இறங்கிப்
போராட வேண்டிய அவசியமில்லை!!!
அறிக்கைகள் விட்டு
ஆர்ப்பரிக்கவும் தேவையில்லை!!!
உங்கள் வீடுகளில் 
ஒப்பாரி வைக்கவும்
தேவையில்லை!!!

மாறாக....
உங்களுக்குக் கடினமில்லாத
ஒரு சட்டபூர்வமான
உங்களின் ஒரு கையொப்பம் மட்டுமே!!!

உங்கள் ஈழத்தின் மொட்டு
விபூசிகாவை நினைத்து
அவளின் பூப்பெய்த நிகழ்வுக்கு...
உங்களின் ஆசிர்வாதமாக...
பூக்கள் எறிந்து
வாழ்த்துவது போலவே...
ஒரு கையொப்பமிடுங்கள்.!!

உங்கள் ஒட்டுமொத்த 
வாழ்த்துக்களான...
உங்களின் உயிர் கொண்ட 
கையொப்பங்களில்...
அவளின் தாய் ஜெயக்குமாரி
விடுதலையாகி... விபூசிகா என்ற 
தனது அழகிய மலரை
அரவணைத்துக் கொள்வாள்!!!

உங்களின் கையொப்பங்களில்
ஒரு மலர்
தாயின் அரவணைப்புக்குள்
கசங்காமல் வாழும்!!!

வல்வை அகலினியன்
           (08.03.2015)


இதோ உங்களின் வாழ்த்துக்ளை
கையொப்பங்களாகத் தெரிவிக்க...
இந்த இணைப்பில் செல்லுங்கள்,
உங்களின் உயிரான 
கையொப்பங்களைப் பதிவிடுங்கள்....

0 comments:

Post a Comment