திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 7 ஈழத்தமிழ் உறவுகள் விடுதலை செய்யப்பட்டனர்.

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 7 ஈழத்தமிழ் உறவுகள் விடுதலை செய்யப்பட்டனர்.



திருச்சி சிறப்பு முகாம் உட்பட... தமிழகத்திற்குள் அகதியாக வந்த ஈழத் தமிழ் உறவுகளை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து சிறப்பு முகாம்களும் "ஈழத்தமிழரின் தமிழக அவலச் சிறைகள்" என்றுதான் கருத வேண்டும்! அந்தளவிற்கு மிகவும் கொடூரமானவை.

இருந்தாலும், மகிழ்வான செய்தியொன்று நேற்று திருச்சி சிறப்பு முகாம் என்ற அவலச் சிறையிலிருந்து 7 ஈழத்தமிழ் உறவுகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களின் விடுதலைக்கு முக்கிய காரணம் என்னவெனில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது 15.03.2015 அன்று, இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு உணவு கெடுக்காமல் பட்டினி போட்டு வதைத்ததனால் அங்கிருந்த 24 ஈழத்தமிழ் உறவுகளும் பட்டினிப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இவர்களின் பட்டினிப் போராட்டத்தினை தமிழக அரசின் அதிகாரிகள் கண்டு கொண்டார்களோ, இல்லையோ..? தமிழ் இணையங்கள் கண்டு தமது இணையங்களில் இவர்களது பட்டினிப் போராட்டத்தினை முக்கிய செய்தியாக தங்களது இணையங்களில் பதிவிட்டு இவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து அனைவரது கவனத்திற்கும் கொண்டு சென்றன. அத்தோடு பல முகநூல் உறவுகளும் இவர்களது பட்டினிப் போராட்டத்தினை முக்கியத்துவப்படுத்தி செய்திகளும் வெளியிட்டிருந்தனர்.


இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட தமிழக அரசு ஈழத்தமிழரின் தமிழக அவலச் சிறையான திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சதீஷ்குமார், தர்மராஜா, சசிதரன், ஞானவரோதயன், சுபாஸ்கரன், ஆரோக்கியநாதன் மற்றும் பாலச்சந்திரன் ஆகிய 7 பேரையும் உடனடியாக நேற்று விடுதலை செய்தது. இதில் சுபாஸ்கரன் என்பவரின் மாமியார், சுபாஸ்கரன் பட்டினிப் போராட்டம் இருக்கும் போதே இறந்து போக, அந்த நிகழ்வுக்கு அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தங்களது அனைவரது விடுதலைக்கும் முக்கிய காரணமாக இருந்த தமிழ் இணையங்களுக்கும், முகநூல் (Facebook) உறவுகளுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும்... மகிழ்ச்சிகளையும் விடுதலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளும், அவர்களது உறவினர்களும் ஆனந்தக் கண்ணீரோடு தெரிவித்துக் கொண்டனர்.

இவர்களின் விடுதலை போல திருச்சியிலும், செய்யாறிலும் "ஈழத்தமிழரின் தமிழக அவலச் சிறை"களில் அடைத்து வைக்கப்பட்டு எஞ்சியிருக்கும் மீதமுள்ள ஈழத்து உறவுகளின் விடுதலைக்காக தமிழ் இணையங்களும், முகநூல் உறவுகளும் ஆதரவு கொடுத்து முன்வர வேண்டுமென அன்போடு வேண்டிக் கொள்கின்றேன்.

- வல்வை அகலினியன்.
             (26.03.2015)

இந்தச் செய்தியின் இணைய வடிவம்:

1, தமிழ்வின் இணையம்
2, விவசாயி இணையம்
3, www.tamil24news.com
4, வீரகேசரி இணையம்

0 comments:

Post a Comment